‘தலைவா’என்று கத்தியபடி, குட்டி தலயுடன்... ‘அண்ணாத்த’ படத்தை தியேட்டரில் ரசித்து பார்த்த ஷாலினி!
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, தனது மகனுடன் சென்று 'அண்ணாத்த' திரைப்படத்தை ஆரவாரத்துடன் கண்டு களித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, சிறுத்தை சிவா இயக்கிய 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்பதால், உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது.
குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது ‘அண்ணாத்த’ திரைப்படம். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள், ட்ரெய்லர் என ஒவ்வொன்றும் வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அலாதியாகவே இருந்தது.
இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்களான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இந்தநிலையில், தமிழகத்தில் தீபாவளி அன்று அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் திரைக்கு வந்தது.
சிறுத்தை சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதாலும், அண்ணன்-தங்கை பாசத்தை கொண்டதாலும் ‘அண்ணாத்த’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. எனினும் குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘அண்ணாத்த’ திரைப்படம் நிறைவேற்றியுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விமர்சனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ‘அண்ணாத்த’ திரைப்படம் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க வெளியான முதல் நாளில் 70 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 42 கோடி ரூபாயும், மொத்தம் இதுவரை 112 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பெரும்பாலான திரையரங்குகளில் எல்லாம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு எதிராக சில விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து திரையரங்கிற்கு படை எடுத்து தான் வருகிறார்கள்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அஜித்தின் மனைவியும், தலைவரின் தீவிர ரசிகையுமான ஷாலினி அஜித், 'அண்ணாத்த' படத்தை சத்யம் திரையரங்கில் தன்னுடைய மகனுடன் சென்று பார்த்துள்ளார். ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், தியேட்டரிலிருந்து ஷாலினி அஜித், தனது மகன் ஆத்விக்குடன் வரும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.
அப்போது ரசிகர் ஒருவர், ஷாலினி அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் ஷாலினி அஜித், ‘தலைவா’ என்று கத்தியபடி படம் பார்த்ததாக அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவான்னு கூப்பிட்டு ஆராவரத்தோட அண்ணாத்த படம் பார்த்த Shalini Ajithkumar..#இது_ரஜினி_சாம்ராஜ்யம் pic.twitter.com/HYMHlbveys
— தூத்துக்குடி ஜெபா 🇮🇳 (@Samuelclicks) November 5, 2021