நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்  

இந்தியா முழுவதும் செப்.12-ம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகியுள்ளது.

neet

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள வடகுமரை ஊராட்சியை சேர்ந்த கணேசன் மகன் சுபாஷ்சந்திரபோஸ்(20),  இவர்  நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மணமுடைந்த மாணவர் கடந்த 2 ஆம் தேதி காலை களைக்கொல்லி பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். தகவலறிந்த பெற்றோர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மாணவர் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த தலைவாசல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் வடகுமரை ஊராட்சியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.