உக்ரைனில் ஜெலென்ஸ்கியின் ஆட்சி தீயது குற்றவாளிகள் கையில் ஆயுதங்கள் கொடுத்துள்ளதால் பலாத்காரங்கள் அதிகரிப்பு என எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ukraine war

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து  முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.  இன்று 7வது நாளாக ரஷியா உக்ரைன் மீது ஆக்ரோஷ தாக்குதல் நடத்திவருகிறது. உக்ரைனின் தலைநகரான கீவில் உள்ள ஒருவர், உக்ரேனிய குடிமக்களுக்கு ரஷிய இராணுவம் மட்டும் அச்சுறுத்தல் அல்ல என கூறி உள்ளார்.

பிப்ரவரி 28 அன்றுகீவில் எடுக்கப்பட்ட வீடியோவில், கோன்சலோ லிரா என்ற எழுத்தாளர், ரஷியப் படைகளுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் ஆயுதம் அளிப்பதாக அதிபர்  ஜெலென்ஸ்கியின் ஆட்சி அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள குற்றவாளிகள் இராணுவ தர ஆயுதங்களைப் பெற்றுள்ளனர். இதனால் கொள்ளை, கற்பழிப்பு மற்றும் அனைத்து வகையான அழிவுகளும் நடந்துள்ளன.

மேலும் நேற்று இரவு கீவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் ரஷியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உண்மையாகவே அறியப்படுகிறது; இந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து ரஷியர்கள் 10 கி.மீ. தொலைவில் இருந்தனர். இவை அநேகமாக கும்பல் தொடர்பான துப்பாக்கி சணடையாக இருக்கலாம்.

இந்நிலையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அராஜகத்திற்கு  மத்தியில்  இந்த கும்பல்கள் தங்கள் புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த பகைகளை தீர்த்து முடித்த பிறகு, அவர்கள் பொதுமக்களைக் குறிவைக்கத் தொடங்குவார்கள். இவர்கள் ரஷியர்களுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் என்ற பெயரில் உக்ரைனில் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இது அபத்தமானது மற்றும் பொறுப்பற்றது மற்றும் உக்ரேனிய மக்களை காயப்படுத்தும். ஜெலென்ஸ்கி தலைமையிலான ஆட்சி தீயது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என அதில் தெரிவித்துள்ளார்.