ரஷிய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

flight

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. 

மேலும் இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.  

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இதனிடையே அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காத போது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர். 

புதினின் போர் திட்டமிடப்பட்ட மற்றும் தூண்டப்படாதது. ராஜாங்க ரீதியிலான முயற்சிகளை புதின் நிராகரித்துவிட்டார். மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என்றும் நம்மை நமது வீட்டிலேயே பிரிந்துவிடலாம் என தவறாக நினைத்துவிட்டார்... நாங்கள் தயார் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்ற உள்ளார். அதில் தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷிய விமானங்கள் பறக்க கூடாது என ஜோ பைடன் உத்தரவிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.