மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ஹிந்தி தெலுங்கு என இந்தியாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார். கடைசியாக துல்கர் நடிப்பில் வெளிவந்த குருப் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து முன்னணி பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகும் சுப்-ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் துல்கர் சல்மான்,  தெலுங்கில் இயக்குனர் அனு ராகவப்புடி இயக்கத்தில் யுத்தம் ராசினா பிரேம கதா என்னும் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

இதனிடையே அடுத்ததாக காவல் துறை அதிகாரியாக துல்கர் நடித்துள்ள சல்யூட் திவிரைவில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக முன்னணி நடன இயக்குனர் பிருந்தா முதல் முறை இயக்குனராக களமிறங்கியுள்ள ஹே சினாமிகா திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் , நடிகைகள் காஜல் அகர்வால் & அதிதி ராவ் ஹைடாரி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

வருகிற மார்ச் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகும் ஹே சினாமிகா திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள. ஹே சினாமிகா படத்திற்கு பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹே சினாமிகா திரைப்படத்திலிருந்து அடுத்த பாடலாக சிறகை பாடல் வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் வீடியோ இதோ…