உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் 7 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளும் தங்களது போர் தளவாடங்களை கொடுத்து, உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்கின்றன. இதனால், ரஷ்யாவும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டு நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

அத்துடன், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

அந்த வகையில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக 7 ஆம் நாளான இன்று, அங்கு நடைபெற்று வரும் முக்கிய சம்பவங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ரஷ்யா - உக்ரைன் போர் 7 வது நாள்

- உக்ரைனின் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேற இந்திய மாணவர்கள், ரயில் நிலையங்களில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- சில இடங்களில் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக, இந்திய மாணவர்களை ரயிலில் ஏற்ற உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.

- உக்ரைன் மீது கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி அறிவித்து உள்ளார்.

- உக்ரைன் நாட்டின் கெர்சன் நகர் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்து உள்ளது.

- இன்று நடைபெற்ற உக்ரைன் கார்கிவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்து உள்ளனர்.

- ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 112 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- உக்ரைன் நாட்டின் 2 வது மிகப் பெரிய நகரமான கார்கிவ் ல், ரஷ்ய ராணுவம் மிக பெரிய தாக்குதல் நடத்தி உள்ளது.

- குறிப்பாக, உக்ரைன் பாதுகாப்பு சேவை கட்டடத்தின் மீது ரஷ்ய சற்று முன்னதாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

- இவற்றுடன், உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட 7 மாகாணங்களில் வான்வெளி தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.

- தோல்வி பயம் காரணமாகவே, ரஷ்ய படைகள் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் ராணுவம் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளது.

- உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யா மற்றும் பெலாரஸ் அணிகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்துள்ளது.

-  ரஷ்ய தொழிலதிபர்கள் அமெரிக்காவில் வைத்திருக்கும்  சொகுசு படகுகள், சொகுசு குடியிருப்புகள் மற்றும் தனியார் ஜெட் விமானங்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

- மேலும், ரஷ்ய படையுடன், நேரடியாக அமெரிக்கப் படைகள் மோதாது என்றும், உக்ரைன் மக்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றும்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார்.

- ரஷ்யா செய்துவரும் குற்றங்களை கண்டறிவதற்காக சிறப்பு குழு ஒன்று அனுப்பப்படும் என்றும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார்.

- இதனிடையே, “உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாகவே ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

வீழ்த்தப்பட்ட ரஷ்ய தளவாடங்கள்

- 30 போர் விமானங்கள்

- 31 ஹெலிகாப்டர்கள்

- 211 பீரங்கிகள் 

- 862 ஆயுதம் தாங்கிய கவச வாகனங்கள் 

- 82 ஆர்ட்டிலரிகள் 

- 355 வாகன ஊதிரி பாகங்கள்

என்று, ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான தளவாடங்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் தற்போது தகவல் வெளியிட்டு உள்ளது.