தோழியின் கணவர் மீது காதல் வயப்பட்ட பெண்ணுக்கு, தோழி சம்மதம் தெரிவித்தால், அவர்கள் 3 பேருமாக சேர்ந்து ஒரே வீட்டில் ஒன்றாக ஜாலியாக வாழும் அதிசயம் சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்காவில் தான், இப்படிய ஒரு அதிசய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆனால், இப்படியே ஒரு உல்லாச வாழக்கை வாழும் ஜோடிகள் அமெரிக்கர்கள் இல்லை. அவர்கள் இந்தியர்கள் என்பது தான், இன்னும் கூடுதல் ஆச்சரியம்.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய இளம் பெண் பிடு கரு என்ற இளம் பெண்ணுக்கும், இந்திய இளைஞரான ஒருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு, இரு வீட்டார் சம்மதத்துடன் இந்திய முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

அந்த தம்பதியினர் இருவரும் திருமணத்திற்குப் பிறகு ரொம்பவும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து, அவர்களுக்குள் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, திருமணம் ஆன அடுத்த சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றிப் போய் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இதனால், தம்பதிகள் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அதன் படி, முறைப்படி அவர்கள் விவகாரத்து செய்து, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து உள்ளனர்.

இதனையடுத்து, கணவனைப் பிரிந்த பெண் பிடு கரு, தனிமையில் சோகத்தில் எந்நேரமும் மூழ்கி இருந்துள்ளார். அந்த நேரத்தில் தான், தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்த நண்பர்களான ஸ்பிட்டி சிங் அவரது மனைவி சன்னி சிங் ஆகியோரை பிடு கரு தற்செயலாகச் சந்தித்துப் பேசி உள்ளார்.

அப்போது, தன்னுடைய தோற்றுப்போன திருமண வாழ்க்கை குறித்து, அவர்களிடம் இருவரிடமும் பிடு கரு பகிர்ந்துகொண்டு உள்ளார். இதனைக் கெட்டு வருத்தப்பட்ட அந்த தம்பதிகள், தோழிக்கு ஆறுதல் கூறி உள்ளனர். அத்துடன், “உன்னுடைய மன நிலை மாறுவரை நீ எங்களுடனேயே தங்கிக்கொள்” தங்களது வீட்டில் தங்க வைத்துள்ளனர். 

இதையடுத்து பிடு கரு, தன்னுடைய கடந்த கால வாழக்கையை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கினார். அத்துடன், அந்த வீட்டில் தங்கியிருந்த பிடு கருக்கு, தனது தோழியின் கணவரான ஸ்பிட்டி சிங் மீது காதல் மலர்ந்து உள்ளது. அதே போன்ற காதல் உணர்வு பிடு கரு மீது ஸ்பிட்டி சிங்கிற்கும் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவர்கள் ரொமன்ஸ்சில் மூழ்கி இருந்துள்ளனர். தனது கணவர் மீதான தன் தோழியின் காதல் விசயம், அந்த மனைவிக்குத் தெரிய வந்தது. இதனால், தனது தோழியிடம் இது தொடர்பாகப் பேசிய அந்த மனைவி, கணவர் மீதான தோழியின் காதலுக்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனால், அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் ஒன்றாக உல்லாசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

முக்கியமாக, இந்த 3 பேர் கொண்ட ஜோடி, கடந்த 10 ஆண்டுகளாகவே 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். 

இவர்களது இந்த அழகான மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் பயனாக சன்னி சிங்கிற்கு 2 குழந்தைகளும், பிடு கருவுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

குறிப்பாக, இந்த உல்லாச ஜோடிகள் 3 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருகிறார்கள். இதனால், இந்த ஜோடிகளின் காதல் வாழ்க்கை அவர்களது 3 பேரின் உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள எந்த உறவினரும் அவர்களும் பேசுவதையே நிறுத்திக்கொண்டனர் என்றும், கூறப்படுகிறது.

இந்த வித்தியாசமான திருமண வாழ்க்கை குறித்து பேசிய அந்த 3 பேரும், “எங்கள் 3 பேருக்குள்ளும் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாததால் நாங்கள் இருப்பதால், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறோம்” என்று, கூறி உள்ளார்கள். இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது.