நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “என் அருகில் அமர்ந்து பேசினால் புதினை நான் கடித்து வைத்து விடமாட்டேன்” என்று, தெரிவித்து உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போர் 8 வது நாளாக இன்று நீடித்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், ரஷ்யா சார்பில் பாதிக்கு பாதி அளவில் இழங்குப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான முதல் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், அதன் தொடர்ச்சியாக, 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் முதல் முறை ஒத்தி வைக்கப்பட்டு, அதன் பிறகே நடைபெற்றது. 

எனினும், இந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்படாத நிலையில், நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு புதினுக்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அழைப்பு விடுத்து உள்ளார். 

இது தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் என்னுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்” என்று, உறுதிப்படத் தெரிவித்தார். 

அத்துடன், “புதின் தனது அருகில் அமர்ந்து பேசினால், நான் அவரை கடித்து வைத்து விடமாட்டேன்” என்றும், செலன்ஸ்கி கூறயுள்ளார். 

மேலும், “என்னும் அமர்ந்து பேச அவர் ஏன் அஞ்சுகிறார்?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

“உக்ரைன் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றி விட்டால், அடுத்து ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்காமல் ரஷயா போர் தொடுக்கும் என செலன்ஸ்கி” பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதே போல், “நாங்கள் நேட்டோவில் இல்லை என்றும், அணு ஆயுதங்களும் தங்களிடம் இல்லை” என்று கூறிய ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவுக்கு தாங்கள் வேறு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

முக்கியமாக, “உக்ரைனின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகளின் தாக்குதலானது மேலும் தீவிரம் அடைந்து உள்ளது என்றும், கீவ் நகர வீதிகளில் முன்னேறி சென்ற பீரங்கி டேங்கிகளை ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றதால்” அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “எந்த திட்டமும் இல்லாமல் இந்த போர் நடத்தப்படுவதாக” உலக நாடுகளின் தலைவர்கள் கூறிவரும் கருத்துக்கு, ரஷ்ய அதிபர் புடின் மறுப்பு தெரிவித்து உள்ளார். 

அதன்படி, “தங்களது நாடு திட்டமிட்டபடியே உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை சென்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் மேற்குல நாடுகள் உருவாக்கிய ரஷ்ய எதிர்ப்பு உக்ரைனில் இருந்து அழிக்கப்படும்” என்றும், அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால், உக்ரைன் மீதான படையெடுப்பு அடுத்து வரும் நாட்களில் மேலும் தீவிரம் அடையலாம் என்றும், அஞ்சப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இதனிடையே, “உக்ரைனில் மோசமான நிலை வரப்போவதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடந்த 90 நிமிட தொலைபேசி உரையாடலுக்கு பின், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியதாக” அவரது உதவியாளர் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.