மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடி நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார் 

பிக்பாஸ் வெற்றியை தொடர்ந்து நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்கிய முகென், இயக்குனர் கவின் இயக்கத்தில், ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் ரிலீஸான வேலன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து முகென் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் மதில் மேல் காதல். வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில், ஷீரடி  ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் ஜீவி பிரகாஷின் பேச்சுலர் படத்தில் நடித்த திவ்யபாரதி கதாநாயாக நடித்துள்ளார். மேலும் சாக்ஷி அகர்வால் & KPY பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ரொமாண்டிக் காதல் படமாக தயாராகும் மதில் மேல் காதல் திரைப்படத்திற்கு கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் மதில் மேல் காதல் படத்திலிருந்து முதல் பாடலாக நெஞ்சோரமா பாடல் வெளியானது. பாடகர் பிரதீப் குமாரின் குரலில் மனதை கவரும் நெஞ்சோரமா பாடல் இதோ…