“உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், “ரஷிய தாக்கிய சபோரோஷியா அணுமின் நிலையம் பாதுகாப்பாகவே இருப்பதாக” உக்ரைன் தகவல் வெளியிட்டு உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 8 வது நாளாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஐரோப்பியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது.

அதுவும், ஸபோரிச்ஸியா என்பிபி எனப்படும் 6 உலைகளை கொண்ட இந்த அணுமின் நிலையத்தை, அழிக்க ரஷிய படைகள் அதி தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணுமின் நிலைய்தில், ரஷிய படைகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.  

ஆனால்,  இருந்து அணுமின் நிலையத்தை காப்பாற்ற பிரதான பாதைகளில் அப்பகுதி மக்கள் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும், இந்த அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்த ரஷ்ய படைகள், தீவிரமாக தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. அந்த வகையில், அந்த ஸபோரிச்ஸியா அணுமின் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. 

இதனையடுத்து, “அங்குள்ள அனைத்து திசைகளில் இருந்தும் அணுமின் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக” உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். 

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சர், “உக்ரைன் அணுமின் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டால், 1986 ஆம் ஆண்டு  செர்னோபினில் ஏற்பட்ட பேரழிவை விட, 10 மடங்கு அதிக அழிவுகளை உக்ரைன் சந்திக்க நேரிடும்” என்று, தனது அச்சத்தை தெரிவித்து உள்ளார். 

இதனையடுத்து, “உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை எச்சரித்து உள்ளார்.

அத்துடன், “அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்களையும், அவசரகால சேவைகளையும் உடனடியாக அனுமதிக்க வேண்டும்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “கதிரியக்க அளவுகள் அதிகரித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை என்றும், நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்றும், அமெரிக்க அதிகாரி ஒருவரும் தற்போது தகவல் தெரிவித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே, “ரஷயா தாக்கிய சபோரோஷியா அணுமின் நிலையம், தற்போது பாதுகாப்பாக உள்ளதாக” உக்ரைன் தகவல் வெளியிட்டு உள்ளது.

குறிப்பாக, “ரஷிய தாக்குதலால் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக” அனுமின் நிலைய இயக்குநர் தகவல் கூறியுள்ளார். 

முக்கியமாக, “சபோரோஷியா அணுமின் நிலையத்தின் முக்கிய உபகரணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பிடம் உக்ரைன் தெரிவித்துள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன.