பொதுவாக விளம்பரங்களில் நடிகர்-நடிகைகள் நடிப்பது தான் வழக்கம் இந்த வழக்கத்தை மாற்றி புதிய ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் லெஜண்ட் சரவணன். இன்று இந்தியாவின் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் விளம்பரங்களில் அதன் உரிமையாளர்களே நடிக்கும் புதிய ட்ரெண்டை வித்திட்ட லெஜண்ட் சரவணன் தன் மீது வீசப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களையும் உடைத்தெறிந்தார்.

தொடர்ந்து தனது நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். முன்னதாக அஜித் குமார் & சீயான் விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் மற்றும் த்ரில்லர் திரைப்படமான விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஜோடியான இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இணைந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை இயக்கியுள்ளார்.

தனது தி லெஜன்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரோடக்சன்ஸ் சார்பில் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடிக்கும் இந்த படத்திற்கு தி லெஜண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெஜண்ட் சரவணன் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடெலா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், பிரபு, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர் & மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க தி லெஜண்ட பட பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள தி லெஜண்ட் படத்தில் அனல் அரசு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் லெஜெண்ட் சரவணனின் தி லெஜண்ட்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இதோ…