தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு அறிவித்து இருக்கும் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாரதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் 5989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 23  பேர் உயிரிழந்துள்ளனர். 


கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் 501 பேருக்கும் செங்கல்பட்டில் 615 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா பாதித்த 37,673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்ற குணமடைந்து 1,952 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில் 8,76,257  பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.