தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இருப்பவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய விசயங்கள் சில உள்ளன. அவை, ‘’ தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாளில் மதுகுடிக்க கூடாது, புகைப்பிடிக்க கூடாது. அதேபோல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 2 நாட்களுக்கு முன்பும், செலுத்திக்கொண்ட 15 நாட்கள் வரை  மது அருந்த கூடாது. 


தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் 2 நாட்களுக்கு எளிமையான உடற்பயிற்சிகள் செய்யலாம். கடினமான உடற்பயிற்சி எல்லாம் ஒரு வாரத்திற்கு பின்பு செய்ய தொடங்கலாம்.


தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்பு வலிநிவாரணிகள் எடுக்க வேண்டும் என்றால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி எடுக்க கூடாது.


வலிப்பு, பக்க வாதம், அல்சீமர், மறதி நோய், நரம்பு நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், தினசரி எடுக்கும் மருந்துகளை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தினசரி எடுக்கும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடலாம்.


சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.


புற்றுநோய் இருப்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு தடுப்பூசி எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை தொடரலாம்.


கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.


முதல் தவணை ஊசி செலுத்தி 90 நாட்களுக்கு பிறகு அவசியம் இரண்டாவது தவணை ஊசி செலுத்திக்கொள்ள வேண்டும்.