சசிகாந்த் வழங்க பாலாஜி மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மண்டேலா'. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.

தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இதனிடையே, 'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. நாளை (மார்ச் 13) படத்தின் டீஸர் வெளியாகும் எனப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் குறிப்பிட்டுள்ளது படக்குழு.

விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்துள்ளார். பரத் சங்கர் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். 'ஏலே' படத்தைப் போலவே இந்தப் படத்தையும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை.

கடைசியாக யோகிபாபு பகிர்ந்த கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. பந்துகளை சிக்ஸர், ஃபோர் என விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் யோகிபாபு. ஐ.பி.எல் சீசன் வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வீடியோ விருந்தளிக்கும் வகையில் அமைந்தது.  

பா. ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. யோகிபாபு நடிப்பில் ட்ரிப் திரைப்படம் கடைசியாக வெளியானது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கிய இந்த படத்தில் சுனைனா, கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக அமைந்ததது.