டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அசத்தி வருபவர் சிவகார்த்திகேயன்.ஆல் இன் ஒன் Entertainer ஆக அசத்தும் இவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.இவரது திரைப்படங்கள் வெளியானால் திரையரங்குகள் திருவிழா கோலம் கொள்ளும்.

பலரும் ஒரு Inspiration ஆக சிவகார்த்திகேயன் வளர்த்துள்ளார்.நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை ஏற்று அதிலும் வெற்றி கண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி கொரோனாவிற்கு பிறகு பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.இரண்டு படங்களுமே 100 கோடிகளை அள்ளி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

கொரோனாவிற்கு பிறகு திரையரங்குகள் நிரம்புவது என்பதே அரிதான விஷயமாக இருந்து வருகிறது.பெரிய இயக்குனர்,பெரிய ஹீரோ படங்கள் வந்தால் மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் கூடுகிறது.அப்படி ரிலீஸ் ஆகி பல பாலிவுட் படங்கள் இன்றும் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன.அனால் தென்னிந்திய படங்கள் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் கொரோனா இரண்டாவது அலைக்கு பின் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் அள்ளியது.அதே போல டான் படம் மே 2022-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளை அள்ளியது.இந்த இரண்டு படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்கள் பட்டியலில் அமர்த்தியுள்ளது.

அடுத்ததாக இவர் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இது சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.ப்ரின்ஸ் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் , வசூலில் சிவகார்த்திகேயன் படங்கள் சாதாரண நாட்களிலேயே நல்ல வசூலை ஈட்டும் நேரத்தில் தீபாவளி வாரத்தில் இன்னும் நல்ல வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளை வசூல் செய்யும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு 100 கோடிகளை ஹாட்ட்ரிக்காக வசூல் செய்யும் முதல் ஹீரோ என்ற பெருமையை சிவகார்த்திகேயன் பெறவுள்ளார்.ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.இது நடக்கிறதா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்