பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் இதோ !
By Aravind Selvam | Galatta | October 17, 2022 20:49 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
400 கோடிகளை வசூல் செய்து இந்த படம் பெரிய சாதனை படைத்து வருகிறது.இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்