இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா சமீபத்தில் தமிழ் நடிகர்  விஷ்ணு விஷாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் அவரது திருமண புகைப்படத்தை வைத்து கேலி செய்த  நபருக்கு ஜுவாலா கட்டா தரமான பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு மசூதியில் நடைபெற்ற ஒரு கற்பழிப்பு சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக  பேசப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்த பல பதிவுகளில்  பலரும் ஜுவாலா கட்டா குறிப்பிட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த ஜுவாலா கட்டா, "மசூதியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் பற்றிய பதிவுகளில் என்னை ஏன் குறிப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான அனைத்து  பாலியல் குற்றங்களையும் நான் எதிர்க்கிறேன். ஆனால் இந்த முறை என்னை குறிப்பிடும் அனைத்து குழுக்களும் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு செய்வதாக தோன்றுகிறது. நான் ஒரு நாத்திகர் மீண்டும் கூறுகிறேன் நான் ஒரு நாத்திகர்” என பதிவிட்டிருந்தார். 

அதனை தொடர்ந்து ஒரு நபர்,ஜுவாலா கட்டாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அவரது திருமண புகைப்படத்தை வைத்து அவரை கேலி செய்யும் விதமாக , "நான் ஒரு நாத்திகன் ஆனால் இந்து மத வழிமுறைகளில் எனக்குப் பிடித்ததை நான் பின்பற்றுவேன். என்ன செய்வது இன்ஸ்டாகிராம்-ஐ விட முடியாதே ,அதில் நான் அழகாக இருக்கும் திருமண புகைப்படங்களை பகிர்வதற்காக இதையெல்லாம் செய்ய வேண்டுமே" என்பது போல ஜுவாலா கட்டாவை கேலி செய்துள்ளார்.  

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக  ஜுவாலா கட்டா , "ஆக இந்த எரிச்சலூட்டும் நபர் இணையதளங்களில் எதையோ மேலோட்டமாக பார்த்து விட்டு வந்து இங்கு பிதற்றுகிறார் " என்பதுபோல பதிவிட்டு "அடுத்த முறை இன்னும் கடுமையாக முயற்சிக்கவும்" என அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ஜுவாலா கட்டாவின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில்  ட்ரெண்டாகி வருகிறது.

vishnu vishal wife jwala gatta epic reply for trolls