“விராட் கோலியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்” என்று, வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகை ஒருவர் வெளிப்படையாகவே கேட்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி, தற்போது இருந்து வருகிறார். உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக புகழ் பெற்றுத் திகழும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதிலும், பெண் ரசிகைகள் விராட் கோலிக்கு மிக அதிகம். அதற்கு காரணம், அவரின் திறமை, தோற்றம், ஆக்ரோஷமான 

ஆட்டம் என்று, ஒரு பெரிய பட்டியலே போடலாம். அப்படி, விராட் கோலியிடம் உள்ள ஒவ்வொரு விதமான திறமைக்கும், ஒவ்வொரு மாதிரியான பெண் ரசிகைகள் ஏராளமாக உள்ளனர். 

விராட் கோலிக்கு திருமணம் ஆனாலும், அவரை இணைய தளங்களில் பின் தொடரும் ரசிகைகள் மற்றும் அவரது போட்டிகள் மற்றும் புகைப்படங்களை வெறித்தனமாக ரசிக்கும் பெண் ரசிகையின் பட்டாளம் இன்றளவும் உண்டு.

இது ஒரு புறம் இருக்க, ரிஸ்லா ரெஹான் என்ற பெண், துபாயில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையின் போது, முதன் முறையாக மீடியா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது? கிரிக்கெட்டின் தீவிர ரசிகையான ரிஸ்லா ரெஹான், ஒட்டு தொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் தன் வசம் ஈர்த்தார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண்ணான ரிஸ்லா ரெஹான், இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிப்பதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிக்குச் சற்று முன்னதாக, மான்செஸ்டரில் ரிஸ்லா கலந்து கொண்டார். இந்த எதிர்பாராத நிகழ்வானது, அனைத்து தரப்பினரையும் கடும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குறிப்பாக, நியூசிலாந்து அணி உடனான இந்தியாவின் அரையிறுதி போட்டிக்கு முன்னதாக ஒரு பேட்டியின் போது, பாகிஸ்தான் அணி கடைசி 4 போட்டிகளில் விளையாடும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை வாங்கியதாக, ரிஸ்லா ரெஹான் கூறியிருந்தார்.

ஆனால், “பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக விளையாடும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், அது அவ்வாறு செயல்படவில்லை” என்றும், அவர் தனது கவலையைத் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, அவர் அளித்த பேட்டி ஒன்றில், “இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தானுக்கு பரிசு வழங்க விரும்பினால் நீங்கள் கேட்கும் ஒரு விஷயம் என்ன?” என்று, ரிஸ்லாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அப்போது பதிலா் அளித்த ரிஸ்லா ரெஹான், “தயவு செய்து எங்களுக்கு விராட் கோலி கொடுங்கள்” என்று, வெளிப்படையாகவே, கேட்டார். இந்த பதிலை யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில், அனைவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 

அதன் தொடர்ச்சியாக பேசிய ரிஸ்லா ரெஹான், “ரோகித் சர்மா அல்லது ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரை சேர்ப்பது கூட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உதவும்” என்றும், தனது நிலைப்பாட்டை அவர் கூறி இருந்தார். தற்போது, இந்த பேட்டி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 

“விராட் கோலியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்” என்று, வெறித்ததுமான பாகிஸ்தான் ரசிகை ஒருவர் வெளிப்படையாகவே கேட்கும் இந்த வீடியோவிற்கு கீழே, அவரது சக ரசிகைகளும், ரசிகர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்த செய்தி இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.