தல அஜித் என்று அஜித்குமாரை செல்லமாக ரசிகர்கள் அழைக்க காரணமாக அமைந்த திரைப்படம் தீனா. இந்த தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் A.R.முருகதாஸ். தீனாவின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கிய ரமணா படத்தில் விஜயகாந்த் பேசும் வசனங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமானது. 

அடுத்ததாக A.R.முருகதாஸ் சூர்யாவுடன் இணைந்து தமிழில் மெகா ஹிட்டான கஜினி திரைப்படம் பாலிவுட்டில்  A.R.முருகதாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் இணைந்த கஜினி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்  இந்திய அளவில் A.R.முருகதாஸை முன்னணி நட்சத்திர இயக்குனராக மாற்றியது. 

முதல் முறை தளபதி விஜய் உடன் கைகோர்த்த A.R.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம்.தளபதி விஜய் முருகதாஸின் வெற்றிக்கூட்டணி கத்தி திரைப்படத்தில் மீண்டும்  இணைந்தது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து  A.R.முருகதாஸ் இந்தமுறை சர்க்கார் படத்தில் கொஞ்சம் அரசியலையும் தொட்டார். கடைசியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான A.R.முருகதாஸ் சூப்பர் ஸ்டாரை  வைத்து இயக்கிய தர்பார் திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. 

இந்நிலையில் தற்போது A.R.முருகதாஸ் நடித்த ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் உதய் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பூச்சூடவா திரைப்படத்திற்கு A.R.முருகதாஸ் வசனகர்த்தாவாகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தபோது பூச்சூடவா திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். 

ரூம் பாயாக தோன்றும் அந்த ஒரு காட்சியை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் A.R.முருகதாஸ் வெளியீட்டு பழைய  ஞாபகங்களை நினைவு கூறுவதாக பதிவிட்டுள்ளார். தற்போது இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இருக்கும்  A.R.முருகதாஸ்  ஒரு ரூம் பாயாக நடித்திருக்கும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.