தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து தற்போது விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னணி தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். கட்டா குஸ்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு கபந்த மார்ச் 6-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு முழுவீச்தில் நடைபெற்று வருகிறது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி தமிழில் கட்டா குஸ்தி & தெலுங்கில் மட்டி குஸ்தி என இரு மொழிகளில் கட்டா குஸ்தி திரைப்படம் தயாராகி வருகிறது. வெண்ணிலா கபடி குழு & ஜீவா என விளையாட்டை மையப்படுத்தி விஷ்ணு விஷால் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதையடுத்து தற்போது தயாராகி வரும் கட்டா குஸ்தி திரைப்படமும் கட்டாயமாக அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் பிறந்த நாளான இன்று(ஜூலை 17) அவருக்கு வாழ்த்து கூறும் வகையிலும் கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரமான வீரா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் புதிய GLIMPSE வீடியோ வெளியானது. அந்த வீடியோ இதோ…