தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

முன்னதாக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த FIR திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து ராட்சசன் திரைப்படத்திற்கு பின் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்த சைக்கோ த்ரில்லர் படமாக தயாராகி வரும் திரைப்படம் மோகன்தாஸ்.

இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமரன், பிக்பாஸ் ஷாரிக்,கருணாகரன் ஆகியோர் மோகன்தாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மோகன்தாஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி.KS இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள மோகன்தாஸ் படத்திற்கு அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் பிறந்த நாளான இன்று (ஜூலை 17-ம் தேதி) மோகன்தாஸ் திரைப்படத்தின் புதிய GLIMPSE வீடியோ தற்போது வெளியானது. அந்த GLIMPSE வீடியோ இதோ…