தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் H.வினோத் கடைசியாக H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து தற்போது அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் #AK61 திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் H.வினோத் தொடர்ந்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. முன்னதாக சதுரங்கவேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை 2 திரைப்படமும் தயாரானது.

அரவிந்த்சுவாமி மற்றும் த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை மனோபாலா தயாரித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த சதுரங்க வேட்டை 2 திரைப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சதுரங்கவேட்டை திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸாகாமல் தள்ளிப்போன நிலையில், மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தற்போது 2022 ஆம் ஆண்டு வெளியாகிறது. வருகிற அக்டோபர் 7ஆம் தேதி சதுரங்கவேட்டை திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#Sathurankavettai2 All set for grand release on October 7th starring @arvindswami and @trishtrashers #Sathurankavettai2FromOctober7#Manobalaspicturehouse @manobala #OnskyProductions @hvinoth @nvnirmalkumar @ashwamithra #Radharavi @prakashraaj @iYogiBabu @actornasser #Chandini pic.twitter.com/ZCh9cSbad9

— Nikil Murukan (@onlynikil) July 17, 2022