தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் A.L.விஜய், அஜித்குமார் கதாநாயகனாக நடித்த கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து A.L.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த மதராசப்பட்டினம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

மேலும் சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள், தாண்டவம், தளபதி விஜயின் தலைவா, பிரபுதேவாவின் தேவி, ஆகிய படங்களை இயக்கிய விஜய் இயக்கத்தில் வெளியான சைவம், தியா, லக்ஷ்மி ஆகிய திரைப்படங்களும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக A.L.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி திரைப்படம் கடந்த ஆண்டு(2021) வெளியானது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் A.L.விஜய் புதிய வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த இதர தகவல்கள் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் விஜயின் தாயார் வள்ளியம்மை இன்று ஜூலை 17-ஆம் தேதி காலமானார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் ஈசன் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்த நடிகருமான A.L.அழகப்பன் அவர்களின் மனைவியும் இயக்குனர் A.L.விஜய் மற்றும் நடிகர் A.L.உதயா அவர்களின் தாயாருமான வள்ளியம்மை அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை காலை 10.30 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் A.L.விஜயின் தாயார் வள்ளியம்மை மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

திரைப்பட தயாரிப்பாளர்கள்
ஏ எல் அழகப்பன் அவர்களின் மனைவியும்
இயக்குனர் ஏ எல் விஜய், ஏ எல் உதயா அவர்களின் தாயாருமான
ஏ எல் வள்ளியம்மை அவர்கள் 17.07.2022 இன்று காலை இயற்கை எய்தினார் நாளை 10.30க்கு பெசன்ட்நகர் இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெரும் pic.twitter.com/BBtEIVzk0K

— Diamond Babu (@idiamondbabu) July 17, 2022