தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கிய நடிக்க உள்ளார் முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கு நடிகர் விஷாலின் நேரில் சந்தித்தார். இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா..? என கேட்டபோது, “தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக நான் நடிக்கவில்லை. தளபதி விஜய் அவர்களுக்கு வில்லனாக நடிப்பதை விட இயக்குனராக தளபதி விஜய்யின் திரைப்படத்தை இயக்க விரும்புகிறேன். ரசிகன் திரைப்படத்திலிருந்து தளபதி விஜயின் ரசிகனாக இருக்கிறேன். முறையாக அவரிடம் அனுமதி பெற்று அவருக்காக கதை சொல்லி திரைப்படத்தை இயக்க விரும்புகிறேன். அதுவும் இல்லாமல் வரிசையாக எனக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் இருக்கின்றன. லத்தி திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளை நிறைவு செய்த பிறகு மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த முடிக்க வேண்டும் பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் அந்த முழு பேட்டி இதோ…