தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் பக்க ஆக்சன் பிளாக் திரைப்படமாக நல்ல வரவேற்பை பெற்றது. வலிமை படத்தில் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிக்கும் வெளிவரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் தரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக அஜித் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் தற்போது வெளியானது. அட்டகாசமான அந்த பாடல் இதோ…