மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித் குமாரின் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார் - H.வினோத் - போனி கபூர் மற்றும் நீரவ் ஷா கூட்டணியில் துணிவு திரைப்படம் தயாராகியுள்ளது.

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலும் வெளியாகி ரசிகர்கள் வெளியே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இதனிடையே துணிவு படத்தின் பாடலாசிரியர் வைசாக் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் துணிவு திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் நடிகர் அஜித்குமார் அவர்கள் குறித்தும் சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அஜித்குமார் அவர்களை முதல் முறை சந்தித்த சந்திப்பு குறித்தும் பேசியுள்ளார்.

அப்போது துணிவு படத்தில் தான் இரண்டு பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்த வைசாக், “நான் உள்ளே போனதும் விசாரித்தார்… நாங்கள் இருவரும் ஒரு இருபது நிமிடங்கள் அமர்ந்து பேசினோம். குடும்பம் குறித்தும் குடும்பப் பின்னணி குறித்தும் விசாரித்தார். என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என எல்லாமே விசாரித்தார். கடைசியாக "இந்த இரண்டு பாடல்களில் எனக்கு இரண்டாவது பாடல் மிகவும் பிடித்தது என்னால் தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது என சொன்னார்" என வைசாக் தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் வைசாக்கின் அந்த முழு பேட்டி இதோ…