விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் சென்சார் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | February 02, 2022 13:32 PM IST
செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.
இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான எனிமி படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து து பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும்,லத்தி,மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஷால்.
வீரமே வாகை சூடும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு,ரவீனா ரவி,பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ /ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நல்ல ஆக்ஷன் படமாக இது அமையும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
Glad to announce that #VVS has been censored with U/A! #VVSFromFeb4th #SaamanyuduFromFeb4th #ObbaFromFeb4th #VeeramaeVaagaiSoodum pic.twitter.com/GNAP5ssXQx
— Vishal (@VishalKOfficial) February 2, 2022
Watch the intense and action packed trailer of Vishal's Veeramae Vaagai Soodum!
19/01/2022 05:16 PM
New big glimpse from Vishal's Veeramae Vaagai Soodum - OFFICIAL ANNOUNCEMENT!
17/01/2022 06:15 PM