தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சீயான் விக்ரம். தொடர்ந்து வித்தியாசமான கதைக் களங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  அந்த வகையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல விதமான கெட்டப்புகளில் சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சீயான் விக்ரம், முன்னதாக  இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில் இந்த ஆண்டு கோடை வெளியீடாக பொன்னியின் செல்வன்-1 ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே நடிகர் சியான் விக்ரம் மற்றும் அவரது மகனான நடிகர் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் படம் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள மகான் படத்திலிருந்து இதுவரை வெளிவந்த சூரையாட்டம் மற்றும் எவன்டா எனக்கு கஸ்டடி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக போனா போவுரா பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.