இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா & நான் ஈ ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1&2 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவருகிறது RRR திரைப்படம். RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளிவரும் RRR திரைப்படம் வருகிற மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இதுவரை RRR திரைப்படத்திலிருந்து வெளிவந்த போஸ்டர்கள், பாடல்கள், GLIMPSE வீடியோ மற்றும் ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் RRR திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது யூடியூபில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. மிரட்டலான அந்த ட்ரைலர் இதோ…