தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில்  ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR  நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் கொரோனா குமார் படத்திலும் சிலம்பரசன்.TR நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். 

இதனிடையே இன்று இரவும்(பிப்ரவரி 2), நாளையும் சிலம்பரசனின் பிறந்தநாளை( பிப்ரவரி 3) முன்னிட்டு பத்து தல படத்தில் சிலம்பரசனின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டரும், Glimpse வீடியோவும் வெளியாக உள்ளன. அந்த வகையில் சிலம்பரசன்..T.R மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படத்திலிருந்து நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாள் சர்ப்ரைஸாக புதிய போஸ்டர் வெளியானது.

ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்தை U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ளார். நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான மஹா படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.R.மதி ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ள மஹா படத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் சிலம்பரசன்.T.R அவர்களுக்கு கலாட்டா குழுமம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.  நடிகர் சிலம்பரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மஹா படக்குழு வெளியிட்ட வைரல் போஸ்டர் இதோ...