தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து அதிரடி ஆக்சன் த்ரில்லர் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் விஷால் அடுத்ததாக துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். விரைவில் லண்டனில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்த விஷால் திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்திருக்கும் லத்தி திரைப்படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக விஷால்-ஆர்யா இணைந்து நடித்த எனிமி திரைப்படத்தை தயாரித்த மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் வர்மா மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

G.V.பிரகாஷ் குமார் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN இந்தியா திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளான இன்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மிரட்டலான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Welcome to the world of #MarkAntony, GB pic.twitter.com/qOF8j2GtTm

— Vishal (@VishalKOfficial) August 29, 2022