தமிழில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான அலை திரைப்படம் மூலமாக அறிமுகமானார் இயக்குனர் விக்ரம் கே குமார். பின்னர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு  நடிகர் மாதவன் நடிப்பில் யாவரும் நலம் (13MB)என்ற திரைப்படத்தை தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படமாக்கி வெளியிட்டார். இத்திரைப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். PSYCHOLOGICAL  ஹாரர் திரில்லர் படமாக வெளிவந்த யாவரும் நலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

vikram k kumar new movie thank you movie completes the schedule

தொடர்ந்து தெலுங்கில் உருவான மனம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தார் விக்ரம் கே குமார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் A.R.ரகுமான் இசையில் உருவான 24 திரைப்படத்தின் மூலமாக அகில இந்திய அளவில் பேசப்பட்டார். 

 

இயக்குனர் விக்ரம் குமார் கடைசியாக 2019ஆம் ஆண்டு இயக்கிய கேங் லீடர் திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடிக்க அமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இப்போது மனம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் நாக சைதன்யா உடன் இணைந்து இருக்கிறார் விக்ரம் கே குமார். 

தேங்க்யூ என பயிரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நாக சைதன்யா உடன் இணைந்து நடிக்கிறார் ராஷி கண்ணா இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் பிசி ஸ்ரீராம் அவர்கள் இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு இன்று முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.