பிரபல இளம் நடிகர்களில் ஒருவரான சந்திப்  கிஷன் தெலுங்கில் வெளியான பிரஸ்தனம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த சந்திப்  மறந்தேன் மன்னித்தேன் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில்  நடித்தாலும்,  தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்-ன் முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

sundeep kishan scifi thriller maayavan ready for its sequel

தொடர்ந்து இயக்குனர் - தயாரிப்பாளர் சிவி.குமார் தயாரித்து இயக்கிய “மாயவன்” திரைப்படத்திலும் நடித்தார் சந்தீப் கிஷன். விறுவிறுப்பான மாயவன் திரைப் படத்தின் திரைக்கதையை இயக்குனர் நலன் குமாரசாமி அமைக்க திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியமாக இருந்தது. தமிழில் இதுவரை வந்த சயின்ஸ்ஃபிக்சன் திரில்லர் திரைப்படங்களில் இல்லாத ஒரு ஸ்டைலில் மாயவன் திரைப்படம் இருந்ததால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

 

தமிழில் சூப்பர் ஹிட்டான சைன்ஸ்பிக்ஸன் திரில்லர் படமான மாயவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது முதல் படத்தை தயாரித்து இயக்கிய சிவி.குமார் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்து இயக்கவுள்ளார். சந்திப்-ன் பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாள் பரிசாக இந்த திரைப்பட அறிவிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் இயக்குனர் சிவி.குமார்.

sundeep kishan scifi thriller maayavan ready for its sequel

இந்நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற திரைப்படமும் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படமும் சந்தீப் கிஷன் நடித்து வெளிவர தயாராக உள்ளது.