"விஜயின் தளபதி 68 பட அறிவிப்புக்கு பின் முதல் கொண்டாட்டம்!"- வெங்கட் பிரபுவிற்கு குவியும் வாழ்த்துகள்... வைரல் புகைப்படங்கள் இதோ!

விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 பட முதல் கொண்டாட்டம்,Vijay venkat prabu in thalapathy 68 movie first celebration | Galatta

இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் சக்கரவர்த்தியாகவும் பல கோடி தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜய் தனது 68வது திரைப்படமாக தயாராக இருக்கும் தளபதி 68 திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய இந்த அறிவிப்பு நேற்று மே 19ஆம் தேதி அதிரடியாக வெளியானது. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படமான லியோ படத்தில் தற்போது தளபதி விஜய் நடித்து வருகிறார் பக்க அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக காஷ்மீரில் கிட்டத்தட்ட 50 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாகவே லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வந்த தளபதி 68 படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த தளபதி 68 திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிடும் வகையில் நேற்று வெளிவந்த அறிவிப்பு வீடியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் தளபதி 68 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி விஜய் உடன் தளபதி 68 படத்தில் கைகோர்த்துள்ளது. மேலும் தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தான் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக தளபதி 68 படத்திற்கான முதல் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. பிரபல நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான டானியல் போப்பின் மேடை நாடக நடிகர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறையின் விழாவில் நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவை கவுரவித்த டேனியல் போப், அவரது பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் இணைந்து தளபதி 68 திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வெட்டினர். இது குறித்து டேனியல் தனது ட்விட்டர் பக்கத்தில் விழாவில் கேக் வெட்டிய தளபதி 68 முதல் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வைரலாகும் அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

My heart full thanks and really owe you in life time Na , love u so much @vp_offl Anna. #DaniTheatreStudio's #TheatreActWorkShop Valedictory Ceremony, And first ever cake cutting celebration for #Thalapathy68 announcement with my theatre students@Danielanniepope @SathishwaranPRO pic.twitter.com/mW2cFdmJp6

— Daniel Annie Pope (@Danielanniepope) May 22, 2023

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

RRR நாயகனின் பிறந்தநாள் பரிசு: பிரம்மாண்டமான JrNTR30 பட மிரட்டலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

RRR நாயகனின் பிறந்தநாள் பரிசு: பிரம்மாண்டமான JrNTR30 பட மிரட்டலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

'அல்லாஹ்வும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு!'- ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட செம்ம மாஸ் ட்ரெய்லர் இதோ!
சினிமா

'அல்லாஹ்வும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு!'- ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட செம்ம மாஸ் ட்ரெய்லர் இதோ!