RRR நாயகனின் பிறந்தநாள் பரிசு: பிரம்மாண்டமான JrNTR30 பட மிரட்டலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

ஜூனியர் என்டிஆரின் தேவரா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது,Jr ntr new movie devara first look poster out now | Galatta

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று (மே 19) தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாள் பரிசாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அவரது 30வது படமான JrNTR30 திரைப்படத்தின் அதிரடியான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முன்னதாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் RRR. பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த RRR திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைத்தது. மேலும் உலக அளவிலும் மிகப்பெரிய கவனம் ஈர்த்த RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் உலக சினிமாவில் உயரிய விருதுகளான ஆஸ்கார் மற்றும் கோல்டன் குலோப் ஆகிய விருதுகளையும் வென்றது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஓர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. முன்னதாக சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் சந்திப்பு நடைபெற்றதாகவும் இதில் இயக்குனர் வெற்றிமாறன், ஜூனியர் என்டிஆருக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அது குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் உலா வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் தனது திரைப் பயணத்தில் 30-வது திரைப்படமாக தயாராகும் JrNTR30 படத்தில் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்த ஆச்சார்யா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அடுத்ததாக தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் Jr.NTR30 படத்தை இயக்குகிறார். இந்நிலையில் தற்போது JrNTR30 படத்தின் மிரட்டலான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தேவரா என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கடலில் பல பேர் கத்தியால் குத்தப்பட்டு பிணங்களாக கிடக்க அந்த குவியலுக்கு மேல் ரத்தம் தெறிக்கும் வகையில் ஒரு பெரிய கத்தியோடு மிரட்டலான லுக்கில் ஜூனியர் என்டிஆர் நிற்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 

முதல்முறையாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்தியாவில் கதாநாயகியாக களமிறங்கும் இந்த தேவரா திரைப்படத்தில் வில்லனாக முன்னணி பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நடிக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவில் சாபு சீரில் கலை இயக்கத்தில் உருவாகும் தேவரா திரைப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் படத்தொகுப்பு செய்ய, ராக் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தேவரா படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்டிஆரின் 40வது பிறந்த நாள் பரிசாக அவரது 30வது படருமான தேவரா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

#Devara pic.twitter.com/bUrmfh46sR

— Jr NTR (@tarak9999) May 19, 2023

சினிமா

"முன்னணி நட்சத்திர நடிகருக்காக பின்னணி குரல் கொடுத்த கார்த்தி!"- ரசிகர்களை உற்சாகபடுத்திய வீடியோ இதோ!

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ
சினிமா

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!
சினிமா

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!