பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..

பிரபல நடிகர் சரத் பாபு மறைந்தார் திரையுலகினர் அஞ்சலி - Actor Sarath babu paases away | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.  உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி மறைந்தார். சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம். ரசிகர்கள் சரத் பாபுவிற்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1973 ம் ஆண்டு ‘ராம ராஜ்ஜியம்’ திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. பின் 1977 இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பட்டின பிரவேசம்’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் பின் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார் அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தன்னை சிறந்த நடிகராக நிருபித்து கொண்டிருந்தார். குண சித்திர கதாபாத்திரம் என்றாலும் அல்லது கதையின் திருப்புமுனை கதாபாத்திரம் அல்லது இரண்டாவது ஹீரோ என்றாலே அது சரத் பாபு என்று உறுதி செய்யுமளவு திரையுலகில் வளர்ந்து வந்தார். அவர் நடிப்பில் வெளிவந்த நிழல் நிஜமாகிறது, உதிரி பூக்கள் ஆகிய திரைப்படங்கள் சரத் பாபுவிற்கு தமிழ் திரையுலகில் தனி அடையாளத்தையே பெற்று தந்தது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நண்பர் அல்லது குணசித்திர கதாபாத்திரம் என்று கதையில் ஒரு கதாபாத்திரம் என்றாலே நிச்சயம் அதில் சரத் பாபு பொருந்தி போவார் அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நெற்றிக்கண், வேலைக்காரன், முள்ளும் மலரும்,  முத்து, அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் சரத் பாபு கதாபாத்திரங்கள் மக்களுக்கு மிகவும் பரிச்சியம். அதே போல் உலகநாயகன் கமல் ஹாசனுடன் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ஆளவந்தான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான வசந்த முல்லை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்து இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே 71 வயது நிறைவடைந்த நடிகர் சரத்பாபு சில காலமாகவே உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் பூர்ண குணமடைய ரசிகர்கள் பலர் தங்கள் பிராத்தனைகளை தெரிவித்து வந்தனர். தற்போது ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் ஆளுமைகள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தென்னிந்தியாவின் புகழ் மிக்க நடிகரான சரத்பாபு மறைவிற்கு கலாட்டா குழுமம் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறது.

மோகன் லால் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ஜெயிலர் பட இயக்குனர் – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

மோகன் லால் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ஜெயிலர் பட இயக்குனர் – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..
சினிமா

‘தளபதி 68’ குறித்து அன்றே கணித்த அல்போன்ஸ் புத்திரன்..! இணையத்தில் வைரலாகும் பிரேமம் பட இயக்குனரின் பதிவு – விவரம் இதோ..