'அல்லாஹ்வும் அய்யனாரும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு!'- ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட செம்ம மாஸ் ட்ரெய்லர் இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட ட்ரெய்லர்,arya in kathar basha endra muthuramalingam movie trailer | Galatta

ஆர்யாவின் அதிரடி ஆக்சன் அவதாரமாக தயாராகி இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த கவனத்தைப் பெற தவறியதோடு கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் சார்பட்டா 2 படத்திலும் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி-யின் பிரம்மாண்ட படைப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ஆர்யா முன்னணி வேடத்தில நடிக்க இருக்கிறார். முன்னதாக சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க இருந்த நிலையில், ஜெயம் ரவிக்கு பதிலாக இப்படத்தில் விஷால் நடிப்பதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே தனக்கே உரித்தான ஸ்டைலில் கிராமத்து பின்னணியில் பக்கா மாஸ் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களாக கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களின் வரிசையில் இயக்குனர் M.முத்தையா உருவாக்கியுள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் முதல் முறையாக ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில், ஆர்யாவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. செம்ம மாஸ் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ட்ரெய்லர் இதோ…

 

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ
சினிமா

பூஜை உடன் புதிய படத்தை தொடங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி... மீண்டும் இணையும் சுவாரசியமான கூட்டணி! விவரம் இதோ

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!
சினிமா

வெற்றிமாறனின் மெகா பிளாக்பஸ்டர் விடுதலை பாகம் 1 படைத்த தரமான சாதனை... தயாரிப்பாளரின் முக்கிய பதிவு இதோ!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு... அருள்நிதியின் மிரட்டலான அவதாரத்தில் கழுவேத்தி மூர்க்கன்! அதிரடி ட்ரெய்லர் இதோ
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு... அருள்நிதியின் மிரட்டலான அவதாரத்தில் கழுவேத்தி மூர்க்கன்! அதிரடி ட்ரெய்லர் இதோ