மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் மொழியைத் தாண்டி தற்போது இந்திய திரை உலகின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் வருகிற மே 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

இதனையடுத்து ஹிந்தியில் ஃபேமிலி மேமன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் புதிய வெப் சீரிஸில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான மேரி கிறிஸ்த்மஸ் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மேரி கிறிஸ்த்மஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிக்க, முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் படப்பிடிப்பு தளத்தில் ராதிகா மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…
vijay sethupathi katrina kaif in merry christmas movie shooting spot photos