தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிலம்பரசன்.TR நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முற்றிலும் நிறைவடைந்தது. நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் சிலம்பரசன்.TR பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டாவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தி வாரியர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தி வாரியர் படத்திற்காக நடிகர் சிலம்பரசன்.T.R பாடியுள்ள புல்லட் பாடல் வருகிற ஏப்ரல் 25-ம் தேதி மாலை 5:45 மணிக்கு ரிலீஸாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன்.TR புல்லட் பாடலை பாடும் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த மேக்கிங் வீடியோ இதோ…