விருப்பம் இல்லாத திருமணம்.. மாப்பிள்ளையை மலை உச்சுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து மணப்பெண்!

விருப்பம் இல்லாத திருமணம்.. மாப்பிள்ளையை மலை உச்சுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து மணப்பெண்! - Daily news

மாப்பிள்ளை பிடிக்காததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண், தனது “தோழிகளை சந்திக்க வேண்டும்” என்றுக் கூறி, மாப்பிள்ளையை தனியாக மலை உச்சியில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் படேரு மண்டலத்தை சேர்ந்த29 வயதான ராமு, ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். 

ராமுக்கும், அதே மாவட்டத்தில் உள்ள ரவிக்கமடம் மண்டலத்தை சேர்ந்த 24 வயதான புஷ்பா இளம் பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. 

அதன் படி, மே மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவருக்கு திருமணம் செய்ய இரு வீட்டார் முறைப்படி முடிவு செய்யப்பட்டது. அதன் படி, இரு வீட்டார் சார்பிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

ஆனால், “மாப்பிள்ளை ராமுவை திருமணம் செய்ய மணப்பெண் புஷ்பாவுக்கு விருப்பம் இல்லை” என்பதை, பெண் பார்த்த முதல் நாளிலேயே தனது பெற்றோரிடம் அந்த பெண் கூறியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனாலும், அந்த பெண்ணின் பெற்றோர், தங்களது மகளை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து உள்ளனர். 

அதே நேரத்தில், தனது பெற்றோரை மீறி இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த, அந்த பெண் புஷ்பா திட்டமிட்டு உள்ளார். ஆனால், அது தொடர்பான வாய்ப்பு கிடைக்காத நிலையில், மாப்பிள்ளை ராமுவை கொலை செய்ய அந்த மணப்பெண் முடிவு செய்திருக்கிறார்.

அதன் படி, ராமுவுக்கு போன் செய்து இளம் பெண் புஷ்பா, “எனது தோழிகள் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்கிறார்கள், நீங்கள் தனியாக வாருங்கள். உங்களுக்கு ஒரு பரிசு தருகிறேன்” என்று, அழைத்திருக்கிறார். 

இதனை நம்பி, மாப்பிள்ளை ராமுவும், நேற்று அங்குள்ள அனகப்பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த இளம் பெண் புஷ்பா, “எனது தோழிகள் அங்கு உள்ள மலைக் கோயிலில் காத்திருப்பதாக” கூறி, அந்த மாப்பிள்ளையை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன்படி, ராமுவும் அந்த இளம் பெண்ணுடன் மலை மீது சென்று உள்ளார். மலை மீது சென்றதும் இளம் பெண் புஷ்பா, “எனது தோழிகளை உங்களுக்கு காட்டி உங்களுக்கு நான் சர்ப்ரைஸ் தருகிறேன், நீங்கள் கண்களை மூடுங்கள்” என்று கூறி, தனது துப்பாட்டாவல், அவரது கண்களை கட்டி, அந்த கோயிலின் பக்கவாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

அங்கு சென்றபோது, ஏற்கனவே அந்த இளம் பெண் திட்டமிட்டபடி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமுவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் வலியால் ராமு அலறி கத்தி உள்ளார். அத்துடன், ரத்த வெள்ளத்தில் துடித்த ராமுவைப் பார்த்து, புஷ்பா அப்படியே பயந்து நடுங்கி உள்ளார்.

அதே நேரத்தில், ராமுவின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பக்தர்கள், ராமுவை மீட்டு அனகப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இது குறித்து அனகப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து புஷ்பாவை கைது செய்தனர். 

அப்போது, அந்த இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், “எனககு மணமகன் பிடிக்காததால், அவரை ஏமாற்றி அழைத்து வந்து கோயிலில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டேன்” என்று, கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment