தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள பார்டர் திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், மீண்டும் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் அருண்விஜய் நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் நடிப்பில் அக்னிச்சிறகுகள், பாக்சர் மற்றும் சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ளன. 

முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் வருகிற ஜூன் 17-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இதனிடையே நடிகர் அருண்விஜய், அவரது மகன் அர்னவ் மற்றும் அவரது தந்தை விஜயகுமார் மூவரும் இணைந்து நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது. 

இயக்குனர் சரோ சரவணன் எழுதி இயக்கியுள்ள ஓ மை டாக் படத்தில் நடிகை மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, நடிகர் வினய் வில்லனாக நடித்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவில் நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 

இதுவரை ஓ மை டாக் திரைப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஓ மை டாக் திரைப்படத்தின் அடுத்த பாடலாக I'm a Fighter பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் லிரிக்கல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.