“2 முறை கர்ப்பமாக்கிவிட்டு இப்போது மதபோதகர் ஆகிவிட்டதால் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்!” இளம் பெண் குற்றச்சாட்டு..

“2 முறை கர்ப்பமாக்கிவிட்டு இப்போது மதபோதகர் ஆகிவிட்டதால் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்!” இளம் பெண் குற்றச்சாட்டு.. - Daily news

“2 முறை கர்ப்பமாக்கிவிட்டு இப்போது மதபோதகர் ஆகிவிட்டதால், என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்” என்று, இளம் பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர், ஒரு பரபரப்பான புகார் மனுவை அளித்து உள்ளார். 

அந்த இளம் பெண் அளித்த அந்த புகார் மனுவில், “நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்துவள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான் காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று வந்தேன். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 26 வயதான ஆண் ஒருவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டு, நாங்கள் இருவரும் நட்பாக பழகி வந்தோம். 

எங்களுக்குள் தொடர்ந்து நட்பு வளர்ந்து வந்ததால், ஒரு கட்டத்தில் அந்த நபர் 'என்னுடைய தாயாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், அவரை அருகே இருந்து நீங்கள் கவனித்துக்கொள்வீர்களா?” என்று கேட்டார். 

அதற்கு நானும், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் வீட்டுக்கு சென்று அவருக்கு உதவியாய் இருந்தேன். அப்போது, அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். 

இதன் காரணமாக, நான் கர்ப்பமடைந்தேன். இதனையடுத்து, 'உன்னையே நான் திருமணம் செய்துகொள்கிறேன்' என்று, அவர் என்னிடம் கூறி சமாதானப்படுத்தினார். 

இதை நானும் நம்பினேன். அதன் பிறகு, அவர் என்னை சேலம் அழைத்து சென்று எனது கர்ப்பத்தை கலைக்க வைத்தார்.

அதன் பின், அடுத்த சில மாதங்கள் கடந்துச் சென்ற நிலையில், மீண்டும் அவர் என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதனால், நான் மீண்டும் கர்ப்பமானேன். இதனையடுத்து, மறுபடியும் என்னை சேலம் அழைத்து சென்று, ' என்னை மனைவி' என்று கூறி, டாக்டர்களிடம் கூறி கர்ப்பத்தை கலைக்க வைத்தார். இதற்கு அவருடைய தந்தையும் உடந்தையாக இருந்தார்” என்றும், அந்த பெண் புகார் மனுவில் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “அதன் பிறகு, என்னை திருமணம் செய்து கொள்ள அவரை வற்புறுத்தினேன் என்றும், ஆனால் அதற்கு அவர் வேதம் படித்து வருகிறேன் என்று, மகாராஷ்டிரா மாநிலம் சென்று விட்டார். 

ஆனால், தற்போது அவர் மதபோதகராக திரும்பி வந்து உள்ளார். அவரிடம் சென்று, 'என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று நான் கேட்டேன். ஆனால், அவர் 'நான் இப்போது நான் மதபோதகர் ஆகிவிட்டதால், உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது' என்று, அவர் மறுத்துவிட்டார் என்றும், இதனால் அவர் மீதும், கர்ப்பத்தை கலைக்க உதவிய அவருடைய தந்தை மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தனது புகாரில் அந்த இளம் பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment