தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து இந்திய அளவில் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வருகிறார். முன்னதாக துல்கர் சல்மான் & அதிதி ராவ் ஹைடாரி உடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்த ஹே சினாமிகா திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து கதாநாயகியை மையப்படுத்திய கதைக்களங்களாக பாலிவுட்டில் உமா மற்றும் தமிழில் பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணுடன் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

அதே போல் தமிழில் கருங்காப்பியம் மற்றும் கோஸ்ட் என காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன. முன்னதாக பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்லுவை காஜல் அகர்வால் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் காஜல் அகர்வால் - கௌதம் கிச்லு தம்பதியினருக்கு நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது செல்ல மகனுக்கு நீல் கிச்லு என காஜல் அகர்வால் பெயர் சூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)