மக்களின் மனம் கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து பாலிவுட்டில் மேரி கிறிஸ்மஸ் எனும் புதிய ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும்  அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக,ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள 19(1)(a) திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. அறிமுக இயக்குனர் இந்து.VS இயக்கத்தில் 19(1)(a) திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யாமேனன், இந்திரஜித் சுகுமாரன், இந்தரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 19(1)(a) திரைப்படத்திற்கு மகேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 19(1)(a) திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது. விஜய் சேதுபதியின் 19(1)(a) படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.