தனது ஒவ்வொரு திரைப்படங்களின் வாயிலாக இந்திய அளவில் பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவர உள்ளது. வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் பல மொழிகளில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, லால் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று (ஜூலை 19) காலை இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தொடர்ந்து மருத்துமனையில் இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்திற்கு  கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிரத்னத்தின் உடல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

#JUST_IN : இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ். இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்துள்ளது. #DirectorManiratnam #COVID #Corona

— Galatta Media (@galattadotcom) July 19, 2022