தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் சந்தானம் தற்போது வரிசையாக கதாநாயகனாக நகைச்சுவையை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள #SANTA15 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமும் நிறைவடைந்த நிலையில், விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குலுகுலு.

மேயாதமான் & ஆடை ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்து அதுல்யா சந்த்ரா கதாநாயகியாக நடிக்க, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், லொள்ளுசபா மாறன், லொள்ளுசபா சேஷு, TSR ஆகியோர் குலு குலு படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள குலு குலு திரைப்படம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட வருகிற ஜூலை 29-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் குலுகுலு திரைப்படத்தின் மாட்னா காலி பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த பாடல் இதோ…