அதிரடியான விஷாலின் லத்தி பட டீஸர் ப்ரோமோ இதோ !
By Aravind Selvam | Galatta | July 19, 2022 18:13 PM IST
செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.,.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.
இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான எனிமி,வீரமே வாகை சூடும் படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து லத்தி,மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷால்.
லத்தி படத்தினை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர்.வினோத் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுனைனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதுஇந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.விறுவிறுப்பான இந்த டீஸர் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Catch the latest intense action glimpse of Vishal's Laththi | Yuvan Shankar Raja
08/07/2022 01:58 PM
Vishal suffers a serious injury while shooting for Laththi - here is the video!
04/07/2022 09:23 PM