ஐதராபாத் சிறுமி கூட்டுப் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேருமே பள்ளி மாணவர்கள்! ஒருவர் கைது!

ஐதராபாத் சிறுமி கூட்டுப் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேருமே பள்ளி மாணவர்கள்! ஒருவர் கைது! - Daily news

ஐதராபாத் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்டது 5 பள்ளி மாணவர்கள் என்கிற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்சில் கடந்த 28 ஆம் தேதி அன்று, அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், 5 சிறுவர்களுடன், பென்ஸ் சொகுசு கார் ஒன்றில் அங்குள்ள ஒரு இரவு நேர பப்பிற்கு வந்திருக்கிறார். 

அங்கு, அந்த இரவு நேர நிகழ்ச்சி முடிந்த நிலையில், அதன் பிறகு அந்த 17 வயது சிறுமியை, அவருடைய “வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாக” கூறி விட்டு, அந்த 5 சிறுவர்களும் தங்களது சொகுசு காரான மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றி அழைத்துச் சென்று உள்ளார். இப்படியாக, அந்த 17 வயது சிறுமியுடன் 5 சிறுவர்களும் அந்த இரவு நேரத்தில் மது போதையில் காரில் சென்ற நிலையில், அந்த சிறுமி மீது அந்த 5 பேரும் சபலப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள ஒரு பகுதியில் அவர்கள் சென்றபோது, அந்த 17 வயது சிறுமியை காருக்குள் வைத்தே அந்த 5 சிறுவர்களும் கூட்டாகச் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, அந்த சிறுமியை கீழே இறக்கி விட்டுவிட்டு அந்த 5 இளைஞர்களும் அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கின்றனர். பின்னர், வீடு திரும்பிய அந்த சிறுமியின் முகம் மற்றும் உடம்பின் சில இடங்களில் காயங்கள் இருந்திருக்கிறது. சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தை பார்த்த அவரது தந்தை விசாரித்தபோது, “அங்குள்ள ஒரு பப்புக்கு போய்விட்டு திரும்பி வரும்போது, என்னை 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை” கூறி, அழுதிருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தந்தை, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுவர்கள் பற்றிய முழு தகவலையும் திரட்டி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஒருவன் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வின் மகன் என்பதும், மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்தது.

முக்கியமாக, பாதிக்கப்பட்ட அந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நடந்த அன்று சம்மந்தப்பட்ட அந்த 5 சிறுவர்களுடன், அந்த சிறுமி பேசி கொண்டிருக்கும் வீடியோ, நேற்றைய தினம் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'இந்த வீடியோவானது, இந்த வழக்கின் முக்கிய சாட்சி” என்று, போலீசார் கூறியதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசாரிடம், “இது, மது அருந்தாத பார்ட்டி என்றும், இந்த பார்ட்டியில் இருந்தவர்களுக்கு மதுபானம் யாருக்குமே வழங்கப்படவில்லை” என்றும், அந்த பப் நிர்வாகம் கூறியிருக்கிறது. அத்துடன், தற்போது சம்மந்தப்பட்ட அந்த இளைஞர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தான், “அந்த மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அனைவரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் என்றும், தெரிய வந்திருக்கிறது.

இந்த வழக்கில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரது வயது 18 வயது என்றும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, அடையாளம் காணப்பட்ட மற்றவர்களில் 3 பேர் சிறார்கள் என்றும், அதில் உள்துறை அமைச்சரின் பேரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், போலீசார் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment