தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது நடிகை சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதனை தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2வது படமாக JGM ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர். அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும், லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார். 

அதிரடி ஆக்சன் திரைப்படமாக நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் லைகர் திரைப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் தனிஷ்க் பக்ச்சி பாடல்களுக்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார். 

லைகர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழில் ஆர் கே சுரேஷ் அவர்களின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் லைகர் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து புதிய ப்யோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

9 days to go😍😍 @TheDeverakonda #Liger #VijayDeverkonda pic.twitter.com/iE62oXHSNK

— RK SURESH (@studio9_suresh) August 16, 2022