தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புது இசை விருந்தாக வெளிவரவுள்ள திரைப்படம் டூடி. இயக்குனர் கார்த்திக் மதுசூதனனின் கதை, திரைக்கதை, வசனத்தில், உருவாகியிருக்கும் டூடி திரைப்படத்தை கார்த்திக் மதுசூதனன் மற்றும் சாம்.RD.X இணைந்து இயக்கியுள்ளனர்.

கனெக்டிங் டாட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் டூடி திரைப்படம் “GUN Based படம் அல்ல GUITAR Based திரைப்படம்” என இயக்குனர் கார்த்திக் மதுசூதனன் தெரிவித்துள்ளார். அதற்கு தகுந்தார்போல் ரொமான்டிக்கான மியூசிக்கல் திரைப்படமாக தயாராகியிருக்கும் டூடி திரைப்படத்திற்கு KC.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார்.

டூடி திரைப்படத்தில் கார்த்திக் மதுசூதனன் மற்றும் ஸ்ரீதா சிவதாஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜீவா ரவி, அர்ஜுன் மணிகண்டன், சனா ஷாலினி, ஸ்ரீரஞ்சினி, விஜய் மணிகண்டன், மதுசூதனன்GV, அக்ஷதா, எட்வின் ராஜ், உத்தாரா, ராணி சுவாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மதன் சுந்தர்ராஜ் மற்றும் சுனில் GN இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் டூடி திரைப்படத்திற்கு சாம்.RD.X படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி டூடி திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டூடி படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான கார்த்திக் மதுசூதனன் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  LIVE-ஆக GUITAR இசைத்தபடி படத்தின் பாடல்களை பாடி படக்குழுவினர் உடன் சேர்ந்து ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளார்.  ரொமான்டிக்-மியூசிக்கல் திரைப்படமாக வெளிவர இருக்கும் டூடி திரைப்படத்தின் இந்த ப்ரமோஷன் பணிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.